போதை மருந்து கடத்தும் நயன்தாரா: கோகோ டிரெய்லர் இதோ!

வியாழன், 5 ஜூலை 2018 (19:30 IST)
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இந்த படம் சுருக்கமாக கோகோ என அழைகப்படுகிறது. 
 
ஹீரோயினை முன்னிலைப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினாக நயன்தாரா பிரதான வேடத்தில், மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியானது. 
 
இந்த படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜேக்குலின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 
 
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடல் மற்றும் டிரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டும் வெளியாகியுள்ளது. மேலும், படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் பாலா படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா?