இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகவுள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
	
 
									
										
								
																	
	
	இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் “நீலம் புரொடக்ஷன்” மூலமாக வெளிவந்த ”பரியேறும் பெருமாள்” திரைப்படத்தை அடுத்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.
	
 
									
										
										
								
																	
	
	இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை பா.ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்த அதிரன் ஆதிரை இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரித்விகா மற்றும் ஆனந்தி நடித்துள்ளனர்.
	
 
									
										
										
								
																	
	
	”தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ்” மற்றும் “மகிழ்ச்சி” ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளரான தென்மா, இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.