உங்க அப்பா செத்தாரே ம***ர் வழிச்சியா நீ...? பாரம் ட்ரைலர் ரிலீஸ்..!

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (18:33 IST)
கடந்த 2019ம் ஆண்டு சிறந்த மாநில படங்களில் தமிழுக்கான படத்தில் தேசிய விருது வென்ற படம் "பாரம்". நம் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை வெளியாகியுள்ளது என்பதே இந்த அறிவிப்பு வந்த பிறகு தான் நம்மில் பலருக்கும் தெரியவந்தது. 
 
பிரியா கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இப்படம் கடைசி காலத்தில் பெற்ற தந்தையை மகன் கவனித்து கொள்வதை எவ்வளவு சுமையாக கருதுகிறான் என்பதையே கருவாக வைத்து எடுத்துள்ளனர். மனைவியை இழந்த கருப்புசாமி சென்ற ஒரு நைட் வாட்ச் மேனின் வாழ்க்கையை படமாக்கியுள்ள இயக்குனர் இப்படத்தில் சமூகத்தின் அவலங்களையும் எதார்த்தமான உண்மைகளையும் உள்ளடக்கி உருவாகியுள்ளார். 
 
கிராமங்களில் வயதான முதியவர்களை பராமரிக்க முடியாமல் உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்காமல் வெறும் இளநீர் கொடுத்து கருணை கொலை செய்யும் கொடுமையை விவரிக்கும் படம் தான் பாரம். சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலரை பிரபல யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரைலர் துவங்கும் போதே சிவகார்த்திகேயனின் குரலில் ஒரு அழுத்தமான வசனத்துடன் ஆரம்பிக்கிறது.  வருகிற பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் கொடுத்தது பணம் இல்லை.. வாழ்க்கை!.. உருகும் நடிகர்!...

Thalaivar173: சிபி சக்ரவர்த்தி வெளியேறியதற்கு காரணம் அவரா?.. இல்லை ரஜினியா?..

ஜனநாயகன் ஏப்ரல் 24-ல் தியேட்டரில் ரிலீஸாவது உண்மையா?.. நடப்பது என்ன?..

ஜனநாயகன் லீக்!. நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் எடுத்த முடிவு?..

ரஜினி படத்திலிருந்து விலகிய சிபி சக்ரவர்த்தி?!. இயக்குனர் யார் தெரியுமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments