அட்லீயின் "அந்தகாரம்" படத்தின் விறு விறுப்பான ட்ரைலர் ரிலீஸ்!

புதன், 15 ஏப்ரல் 2020 (10:19 IST)
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய அட்லீ தனது இரண்டாவது படத்திலே நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மாபெரும் பிரபலமானார்.

தான் இயக்கும் படங்களில் பல்வேறு சர்ச்சைகள், கதை திருட்டு என பல விஷயங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி அட்லீயின் பிலிம் மேக்கிங் அவரை தனித்து  காட்டியது. மேலும் ஒரு  இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பிலும் சிறந்து விளங்கி வருகிறார். அவரது  சொந்த நிறுவனமான  A For Apple கம்பெனி மூலம்  சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது "அந்தகாரம்" என்ற விறு விறுப்பான ஆக்க்ஷன் படத்தை தயாரித்து வருகிறார். அந்தகாரம் என்பது “பிசாசின் ஆதிக்கம் நிறைந்திருக்கிற இடம்” ; “இருள்” ; “பிசாசின் ஆளுகைக்கு உட்பட்ட இடம்” என பல பொருள்படும் இந்த படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். விக்னராஜன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் யூடுயூப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அப்பாவின் சூப்பர்ஹிட் பாடலை அற்புதமாக பாடும் ஸ்ருதி ஹாசன் - வீடியோ!