Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெப் சீரிஸில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை – விரைவில் டிரைலர்!

Advertiesment
வெப் சீரிஸில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை – விரைவில் டிரைலர்!
, ஞாயிறு, 19 ஜூலை 2020 (16:42 IST)
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக எடுக்க இருக்கிறார் இயக்குனர் ஏ எம் ஆர் ரமேஷ்.

உலகம் முழுவதும் இப்போது ஓடிடி தளங்கள் திரையரங்குகளுக்கு இணையான இடத்தைப் பிடித்து வருகின்றன. கொரோனாவால் ஏற்பட்டுள்ள முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ரிலீஸ் செய்து வருகின்றன. ஓடிடியில் ரிலீஸாகும் வெப் சீரிஸ்கள் பெரும்பாலும் வன்முறை மற்றும் பாலியல் கதைகளைக் கொண்டவையாக உள்ளன.

அதற்கேற்றார் போல வாழ்ந்து மறைந்த கேங்ஸ்டர்களின் வாழ்க்கை வரலாறுகளை சீரிஸாக எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. உலகளவில் எஸ்கோபர் போன்ற மாபியாக்களின் கதையை எடுத்த நிலையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் வாழ்க்கையை ஏ எம் ஆர் ரமேஷ் வெப் சீரிஸாக உருவாக்கி வருகிறார். இவர் ஏற்கனவே வனயுத்தம் என்ற பெயரில் வீரப்பனின் வாழ்க்கையை படமாக எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் இதன் டீசர் வெளியாகும் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது