Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆமாம் நான் தலித்தான்… ஆபாசமாக கமெண்ட் அடித்தவருக்கு ரித்விகா நச் பதில் !

Advertiesment
ஆமாம் நான் தலித்தான்… ஆபாசமாக கமெண்ட் அடித்தவருக்கு ரித்விகா நச் பதில் !
, செவ்வாய், 21 ஜூலை 2020 (11:13 IST)
நடிகை ரித்விகா தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட போது, அதில் சாதிய ரீதியாக தாக்கும் விதமாக ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

நடிகை ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை ரித்விகா பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் ரசிகர் ஒருவர் ’பருவத்தில் பன்னி கூட அழகாகத்தான் இருக்கும்’ என்று ’எஸ் சி பெண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரித்விகா ’சரிங்க மிஸ்டர் பாடு... சாரி மிஸ்டர் மாடு’ என்று பதிலடி கொடுத்துள்ளார் ரித்விகாவின் இந்த தைரியமான பதிலடி ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

அதையடுத்து மேலும் விளக்கமளிக்கும் விதமாக ‘நான்  தலித்தாக இருப்பின், மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் நான். வருந்துகிறேன். இனியாவது சாதியற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க. ஒரு வகையில் நானும் தலித்தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனில், பெண்ணாகிய நானும் தலித். காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர்தானே. ஆம் தலித். எம்மை தலித்தாகிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகை பாராட்டியதற்கு நன்றி. பி.கு: தலித் பெண்கள் என்னைவிட அழகு.’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிரத்னம் தயாரிக்கும் நவரசா –ஒப்பந்தம் ஆன மலையாள நடிகர்!