Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8 K தரத்தில் மறு உருவாக்கம் செய்யப்படும் மணிரத்னம் படங்கள்!

Advertiesment
Manirathnam movies to be restored in digital
, திங்கள், 10 மே 2021 (08:40 IST)
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் முன்னணி திரை இயக்குனராக அறியப்படுபவர் மணிரத்னம். இத்தனைக்கும் அவர் மிகப்பெரிய ஹிட் ஒன்று கொடுத்து 22 வருடங்களாகிவிட்டன. அவர் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படம்தான் அவருக்கு வெற்றியைப் பெற்று தந்தது. ஆனாலும் அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் எல்லாம் முக்கிய இயக்குனர்கள் மற்றும் கிளாசிக்கல் படங்களை பிலிம் நெகட்டிவ்களை எல்லாம் டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்து படங்களை பாதுகாப்பது போல இப்போது மணிரத்னம் இயக்கிய 26 படங்களும் 8 K தரத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட உள்ளன. இந்த பணியை ஹெரிடேஜ் பவுண்டேஷன் என்ற அமைப்பு முன்னெடுத்து  செல்ல உள்ளது.

டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட் பின்னர் அந்த படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் ரிலீஸாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்முகக் கலைஞர் கங்கை அமரனின் மனைவி காலமானார்!