இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. அதேநேரம் இன்று படத்தின் டீஸர் வெளியாகிறது.
இப்படியொரு அதிசய சம்பவம் நடந்திருப்பது, கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில். இந்தப் படத்துக்கு யார் இசையமைத்திருக்கிறார் என்பது
இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது. தனுஷ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் என்ற விவரம் மட்டும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இன்று படத்தின் பாடல் டீஸரை வெளியிடுகின்றனர். இன்று இசையமைப்பாளர் யார் என்பது தெரிந்தாலும் தெரியலாம்.