Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக்யராஜ் பட ரீமேக்- சசிகுமார் நடிக்கிறார்

Advertiesment
Sasikumar acting in Thooral ninnu pochu remake
, வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (16:14 IST)
பாக்யராஜ் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றியடைந்த தூறல் நின்னு போச்சு படத்தின் ரீமேக்கில் நடிகர் சசிகுமார் நடிக்கிறார்.
 
கடந்த 1982-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தூறல் நின்னு போச்சு. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுலோக்சனா தமிழில் அறிமுகமானார். மேலும், நம்பியார் முக்கியமான கதாபாத்திரத்தில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
webdunia
 
இந்த படத்தை தற்போது சசிகுமார் ரீமேக் செய்ய உள்ளார். நம்பியார் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்க உள்ளார். மேலும், இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று பேசப்படுகிறது.
 
சசிகுமார் தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களை முடித்து விட்டு தூறல் நின்னு போச்சு படத்தின் ரீமேக்கில் நடிக்க போவதாக கூறப்படுகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘காலா’ படத்துக்கு இத்தனை இடங்களில் வெட்டா?