Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஷால்…. தயாரிப்பாளராக கார்த்திக் சுப்பராஜ்!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஷால்…. தயாரிப்பாளராக கார்த்திக் சுப்பராஜ்!
, சனி, 17 செப்டம்பர் 2022 (09:36 IST)
இயக்குனர் பொன்ராம் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய ரஜினிமுருகன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பொன்ராம் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் தொடங்கப்படும் என தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘முத்துவுக்கு முத்து பாய்க்கும் வாழ்த்துகள்…’ VTK படம் பார்த்துட்டு எஸ் ஜே சூர்யா பகிர்ந்த ட்வீட்!