Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடங்கலுக்கு வருந்துகிறோம் போட்ட ஜீ 5 தளம்… சல்மான் ரசிகர்கள் செய்த சாதனை!

தடங்கலுக்கு வருந்துகிறோம் போட்ட ஜீ  5 தளம்… சல்மான் ரசிகர்கள் செய்த சாதனை!
, சனி, 15 மே 2021 (11:11 IST)
சல்மான் கானின் ராதே திரைப்படம் நேற்று ஜி  ஓடிடி தளத்தில் வெளியானது.

பிரபுதேவா சல்மான் கூட்டணியில் நான்காவது படமாக ராதே திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.  இந்த படத்தில் திஷா பட்டாணி, ரந்தீப் கூடா மற்றும் தமிழ் நடிகர் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கொரிய திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சம் ஒரு வருடமாக இழுத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று ஜி 5 தளத்திலும் திரையரங்கிலும் ஒரே நேரத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்ப்பதற்காக நேற்று ஒரே நேரத்தில் 12 லட்சம் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இத்தனை பேர் பார்க்க ஒரே நேரத்தில் ஒளிபரப்பு செய்ய முடியாமல் ஜி 5 தளத்தின் சர்வர் கிராஷ் ஆகியுள்ளது. இந்திய அளவில் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாவது இதுவே முதல் முறை என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் பார்த்தபின்னர் பலரும் எதிர்மறையான விமர்சனங்களையே வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு சினிமாவின் படுக்கையறை காட்சியில் எல்லை மீறிய கீர்த்தி சுரேஷ் - வீடியோ!