Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சகோதரனுக்காக டான்ஸரான யுவன் சங்கர் ராஜா

சகோதரனுக்காக டான்ஸரான யுவன் சங்கர் ராஜா
, சனி, 19 மே 2018 (11:01 IST)
தன்னுடைய சகோதரனுக்காக டான்ஸர் அவதாரம் எடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
‘தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும்’ என்பதை நிரூபித்து இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹை ஆன் லவ்’ பாடல் மூலம் தன்னுடைய பெருகிவரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய சகோதரர் ஹரிகிருஷ்ணன் பாஸ்கர் (இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன்) நடிக்கும் ‘பேய் பசி’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இசையமைத்து, பாடி, நடனமும் ஆடியிருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர், அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் கவினயம். ‘சூது கவ்வும்’, ‘தீயாய் வேலை செய்யணும் குமாரு’ ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
யுவனின் நடனத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “இந்தப் படம் ஒரு திரில்லர் படம். திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களைத் தவிர்த்து விட்டோம். இந்தக் கதைக்குப் பின்னணி இசைக்கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால், யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பணியாற்றினோம். பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபரிதமானது. ஆனால், இந்தப் படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்து விட்டது. ஆகவே, ஒரு புரமோஷன் பாடலாவது இருக்கட்டும் என்று சேர்த்துள்ளோம். அதில், அவரே முன்வந்து நடித்தும் நடனமாடியும் தந்தது ‘பேய் பசி’ படத்துக்கு மிகப்பெரிய பலம்” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம கெட்டப்பில் வீரமாதேவியின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்