Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அஜித் படத்துக்கு இசையமக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (10:14 IST)
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த  படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இதையடுத்து அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த இரு படங்களுக்குப் பிறகு அஜித் அடுத்து நடிக்கும் படம் அக்டோபரில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அப்போது அவர் நடிக்கும் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் வலிமை படத்தில் பணியாற்றிய போது யுவனுக்கும் இயக்குனர் வினோத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர்  இப்போது அஜித் படத்தில் மீண்டும் இணையவுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments