Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹீரோ உரசுவதற்கு தான ஒத்துக்கிட்டு வரீங்க அப்பறோம் என்ன..? - ராதாரவி

Advertiesment
ஹீரோ உரசுவதற்கு தான ஒத்துக்கிட்டு வரீங்க அப்பறோம் என்ன..? - ராதாரவி
, திங்கள், 5 நவம்பர் 2018 (14:06 IST)
உலகம் முழுக்க பரபரப்பை கிளப்பி வரும் மீ டூ விவகாரம் தமிழகத்திலும் மிகப்பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. 

சின்மயி வைரமுத்துவை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ராதாரவி அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார்.
 
நடிச்சிக்கிட்டு இருக்கும்போது அவர் வேணும்னே என்ன உரசுகிறார் சார் என்று அந்த பெண் அர்ஜுன் பற்றி புகார் தெரிவித்துள்ளார். அதற்கு எல்லாம் சம்மதம் தெரிவித்து தானே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறீர்கள். திரையில் நடிகை நடிகைகளுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்க வேண்டும் என்பார்கள்.
 
ஏதாவது தவறாக நடந்தால் உடனே அது குறித்து புகார் தெரிவிக்க வேண்டும். அதை விட்டுட்டு 15 வருடத்திற்கு முன்பு அவர் தவறாக நடந்து கொண்டார் என்று தற்போது சொல்வதில் பலனில்லை. 
 
அடுத்தவர்களை மிரட்டுவதற்கு தான் மீ டு பயன்படுத்தப்படுகிறது. இப்படியே போனால், நாளை போலீஸ் அதிகாரி குற்றவாளியை நடுரோட்டில் வைத்து தான் கேள்வி கேட்க வேண்டும். லிமிட்டை தாண்டுவதால் தான் நான் மீ டூ இயக்கத்தை ஆதரிக்கவில்லை. இந்த இயக்கம் உண்மையாக இருந்தால் நான் நிச்சயம் ஆதரிப்பேன்.
 
 நானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் தான். சின்மயி சொன்னது எல்லாமே சுத்தப் பொய். அவர் யார் பேச்சையோ கேட்டு தான் என் மீது குற்றம் சுமத்துகிறார் என்கிறார் ராதாரவி. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக்கான் வீட்டின் முன் கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிகர்