Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

Prasanth Karthick
திங்கள், 2 ஜூன் 2025 (11:46 IST)

தன்னைக் குறித்து தவறான வதந்திகள் பரப்புபவர்கள் குறித்து குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் நச் பதில் அளித்துள்ளார்.

 

இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்ட பலர் நடித்து தயாராகியுள்ள படம் குபேரா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஜூன் 20ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 

அதில் பேசிய தனுஷ் “இருட்டில் நான் வழி தவறி தொலைந்து போகும்போது என்னுடைய ஒவ்வொரு ரசிகரும் தீப்பந்தம் ஏந்தி என்னை வழிநடத்தி செல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் என் திரைப்படம் வெளியாவதற்கு 1 மாதம் முன்பு ஏதாவது வதந்திகளை பரப்புகிறார்கள். என்னை பற்றி எந்த வதந்தி வேண்டுமானாலும் பரப்புங்கள்.

 

ஆனால் என் ரசிகர்களின் உதவியோடு நான் மேலே சென்றுக் கொண்டே இருப்பேன். இங்கு இருப்பவர்கள் என் ரசிகர்கள் மட்டுமல்ல. 23 வருடங்களாக அவர்கள் என் வாழ்க்கையில் இருக்கிறார்கள். இதை நீங்க காலி செய்ய நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனம். உங்களால் ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது” என்று பேசியுள்ளார்.

 

சமீபமாக தனுசுக்கும் ஒரு பிரபல நடிகைக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில், அந்த நடிகையின் ரசிகர்கள் தன் மீது பரப்பிய அவதூறுகளுக்குதான் தனுஷ் இந்த பதிலை கூறியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments