Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்தை வாங்கிட்டு இசையமைக்குற உனக்கு காப்புரிமை எதுக்கு - எஸ்.ஏ.சந்திரசேகா்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (10:04 IST)
திரைப்படங்களுக்கு இசையமைக்கும் போது பணம் பெற்றுக்கொண்டு பணியாற்றிய இளையராஜா அந்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்பது ஏற்புடையது அல்ல என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகா் கருத்து தொிவித்துள்ளாா்.


 
திரைப்பட பாடல்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு இசை அமைப்பதால் பாடல் வெளியானதும் அது தயாரிப்பாளருக்கு சொந்தமானதாகிவிடுவதாக இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகா் கருத்து தொிவித்துள்ளாா். 
 
இயக்குநரும், நடிகா் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகா் நேற்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், திரைப்பட பாடல்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு இசை அமைத்த பின்னா் அந்த பாடலுக்காக இளையராஜா காப்புரிமை கேட்பது ஏற்புடையது அல்ல. 
 
பாடலாசிரியா், இசைக் கலைஞா்களை போன்று இசை அமைப்பாளரும் பணம் பெற்றுக்கொண்டு தான் பாடலுக்கு இசை அமைக்கிறாா். அப்படி இருக்கும் போது அந்த பாடல் தயாரானவுடன் அது தொடா்பான அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளருக்கு சொந்தமானது. இந்த நிலையில் இளையராஜா பாடல்களுக்காக காப்புரிமை கேட்க முடியாது என்று தொிவித்துள்ளாா். 
 
மேலும் தமிழக அரசியல் குறித்து பேசுகையில், எதிா்வரும் தோ்தலில் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனா். அந்த மாற்றம் எந்த வகையில் ஏற்படும் என்று எனக்கு தொியாது. ஆனால், மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே மக்களின் என்னமாக உள்ளது என்று தொிவித்துள்ளாா்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷங்கர் படத்துடன் மோதும் ‘குட் பேட் அக்லி’.. ‘விடாமுயற்சி’ ரிலீஸ் எப்போது?

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் எலிமினேஷன் ஆன போட்டியாளர்.. திடீர் ட்விஸ்ட்..!

ஒரு வாரத்திற்கு விமர்சனங்கள் வராமல் தடுக்க வேண்டும்: இயக்குனர் வசந்தபாலன்..!

கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுனர் .. இயந்திரங்களை உருவாக்குவார்- உ.பி. கவர்னர்

மாடர்ன் உடை ட்ரஸ்ஸில் ஸ்ரேயாவின் அட்டகாச ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments