Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''நீங்கள் அர்ப்பணிப்பின் உருவகம்'' - விஜய்யை புகழ்ந்த ''லியோ'' பட துணைத் தயாரிப்பாளர்!

vijay- leo
, திங்கள், 10 ஜூலை 2023 (21:24 IST)
‘’லியோ’’ படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய்யை புகழ்ந்து தன் சமூக வலைதள பக்கத்தில்  ஒரு பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு படத்திற்குப் பின் நடித்து வரும் படம் லியோ.

லோகேஷ் இயக்கி வரும்  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை  செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தின் துணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் ஆவார்.

சமீபத்தில், விஜய் குரலில், அனிருத் இசையமைப்பில், லியோ பட முதல் சிங்கில்   ‘’நா ரெடிதான்’’ என்ற பாடல் வெளியானது. இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இப்பாடல் சர்ச்சையான நிலையிலும்  டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

இந்த நிலையில்,  இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.  

இந்த நிலையில், இப்படடத்தின் அடுத்த அப்டேட் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில்  இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  தன் டுவிட்டர் பக்கத்தில் ‘’லியோவில்  நடிகர் விஜயின் காட்சிகள்  நிறைவடைந்தது ; மீண்டும் இரண்டாவது முறையாக பயணத்தை சிறப்பாக மாற்றியதற்கு நன்றி அண்ணா என்று பதிவிட்டிருந்தார்.

இப்படத்தின் துணைத் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’கடைசி நாளில் உங்களுடன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தது உணர்ச்சிவயமாக இருந்தது.   உங்களைப் போன்ற கடின உழைப்பு மற்றும் நெகிழ்வுதன்மை உள்ள ஒருவரைப்  நினைத்துப் பார்த்ததில்லை. நீங்கள் அர்ப்பணிப்பின் உருவகமாக இருக்கிறீர்கள்… இது ஒரு வாழ்நாள் அனுபவம், உங்களிடம் இருந்து தினமும் கற்றுக் கொண்டது. இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். திரையில் மேஜிக்கை காண காத்திருக்க முடியாது…விரைவில் .. ‘’என்று பதிவிட்டு, விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட நம்ம ஹன்சிகாவா இது? மாடர்ன் உடையில் பியூட்டி குயினாக லைக்ஸ் அள்ளிட்டாங்களேப்பா!