சம்பளம் வாங்காமல் நடித்த யோகிபாபு…குவியும் பாராட்டுகள்

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (22:22 IST)
தமிழ் சினிமாவில் முன்னணில் காமெடி நடிகர் யோகிபாபு. இவர் அஜித்தின் வலிமை,. விஜய்65 உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு படத்தில் நட்புக்காக சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், சந்தானம் நடித்த தில்லுக்குத் துட்டு உள்ளிட்ட பல படங்களில் எடிட்டராக பணியாற்றியவர் கோபிகிருஷ்ணா.

இவரது தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ராயே பேயே. இப்படத்தை சக்திவாசன் இயக்கிவருகிறார்.

இப்படத்தில்  ஐஸ்வர்யா மற்றும் ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் யோகிபாபுவை நடிக்க வைக்கப்  படக்குழுவினர் முயற்சித்தனர்.

அதில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகத்  தெரிகிறது. ஆனால் இப்படத்தில் நடிக்க அவர் சம்பளம் வாங்கவில்லை என்றும் நட்பு ரீதியில் நடித்துக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments