Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து

Advertiesment
யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து
, திங்கள், 28 டிசம்பர் 2020 (16:45 IST)
தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகரான யோகிபாபு கடந்த பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்தார். யோகிபாபுவின் குலதெய்வம் கோவிலில் இந்த திருமணம் நடந்தது
 
யோகி பாபு திருமணம் நடைபெற்றபோது கோவிட்19 மிக வேகமாக பரவி வந்த காரணத்தினால் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் சென்னையில் அவர் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. தாயும் சேயும் நலம் என்றும் நடிகர் மனோபாலா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளாமர் உடையில் கிறங்கடித்த அஞ்சனா - லேட்டஸ்ட் போட்டோஸ்!