யோகிபாபுவின் "பப்பி"- சூப்பர் டிரெண்டாகும் பர்ஸ்ட் லுக்!

புதன், 14 ஆகஸ்ட் 2019 (16:59 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி பாபு தற்போது "பப்பி" என்ற புது படத்தில் நடித்து வருகிறார். 


 
வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வழக்கம் போலவே யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


 
தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே சமூகவலைத்தளங்களில் செம்ம ட்ரெண்டாகி வருகிறது.  இந்த போஸ்டரில் இளைஞர்களை கவரும் வகையில் எழுத்து-இயக்கம் ’முரட்டு சிங்கிள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "கதவை திறந்து விடுங்க வெளியே போகட்டும்" - கடுப்பான சாண்டி!