Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலிவுட்டுக்கு செல்லுங்கள் அட்லி… ஜவான் நிகழ்ச்சியில் யோகி பாபு பேச்சு!

ஹாலிவுட்டுக்கு செல்லுங்கள் அட்லி… ஜவான் நிகழ்ச்சியில் யோகி பாபு பேச்சு!
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:48 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகி பாபு சென்னையில் நடந்த ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது “இயக்குனர் அட்லி தமிழில் எப்படி ஆளுமையோ, அது போல இந்தியிலும் அவர் ஒரு ஆளுமைதான். ஹாலிவுட்டுக்கும் சீக்கிரம் செல்லுங்கள். அங்கேயும் ஆளுமையாக வருவீர்கள். நீங்கள் ஹாலிவுட்டுக்கு சென்றால் நானும் உங்களுடனேயே வந்துவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ஜவான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று துபாயில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக் கானுக்கும் விபூதி அடித்த நயன்தாரா…ஜவன் ப்ரமோஷனுக்கும் மிஸ்ஸிங்!