Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது கூகுள் குட்டப்பன்…. யோகி பாபு கதாபாத்திரத்தின் பின்னணி!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (12:21 IST)
மலையாள திரைப்படமான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பனின் தமிழ் ரீமேக்குக்கு கூகுள் குட்டப்பன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன.

இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார். இந்த படத்தில் அவரே ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரது உதவியாளர் இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது அந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் தர்ஷன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு ஒரு ரோபாவாக முதல் முறையாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments