Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகி பாபுவின் பன்னிக்குட்டி திரைப்பட வியாபாரம் அமோகம்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:16 IST)
யோகி பாபு நடித்துள்ள பன்னி குட்டி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். 

கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி பாபு தற்போது அணுசரன் முருகையா இயக்கத்தில் உருவாகும் பன்னி குட்டி படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் யோகிபாபுவுடன் சேர்ந்து கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். 

இந்த படம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் இப்போது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் திரையரங்க விநியோக உரிமையை நல்ல தொகைக்கு விற்பனை செய்துள்ளது லைகா. விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments