Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’மண்டேலா’ ஆன யோகிபாபு – கதாநாயகனாக அடுத்தப்படம் !

’மண்டேலா’ ஆன யோகிபாபு – கதாநாயகனாக அடுத்தப்படம் !
, புதன், 24 ஜூலை 2019 (12:06 IST)
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோலிவுட் காரர்களுக்கு தற்போது யோகி பாபு இல்லாத வெள்ளிக் கிழமை இல்லை என்றாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் தமிழ்ப் படங்களில் கட்டாயமாக யோகி பாபு இருக்கிறார். அதனால் அவரை வைத்து கூர்கா, தர்மபிரபு மற்றும் ஸாம்பி ஆகிய படங்கள் வெளிவர ஆரம்பித்தன.

இந்நிலையில் தர்மபிரபு படத்துக்குப் பிறகு இனி கதாநாயகனாக நடிப்பதில்லை என முடிவெடுத்த யோகிபாபு இப்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மண்டேலா எனும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்தின் பிரதானக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆணவத்தில் ஆட்டம் போட்ட மதுமிதா - வீடியோ!