யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘சன்னிதானம் P.O’- கவனம் ஈர்க்கும் போஸ்டர்!

vinoth
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (10:13 IST)
அண்மை காலமாக தமிழில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு அனைத்துப் படங்களிலும் அவர் இருக்கிறார். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் கதையின் நாயகனாகவும் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்தன.

ஆனாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நகைச்சுவை வேடத்தில் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் யோகி பாபு பெயர் இருந்தால் படம் விற்பனை ஆகும் என்ற ஒரு பெயரை உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் அவரின் நகைச்சுவைகள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதாகவும் அவர் ‘க்ளிஷே’ ஆகிவிட்டார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் அவர் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிப்பில் ‘சன்னிதானம் P.O’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தை அமுதபாரதி இயக்க, மதுராவ், விவேகானந்தன்  மற்றும் சபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments