Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயதான கெட்டப்பில் யோகி பாபு… கவனம் ஈர்க்கும் கோழிப் பண்ணை செல்லதுரை முதல் லுக் போஸ்டர்!

வயதான கெட்டப்பில் யோகி பாபு… கவனம் ஈர்க்கும் கோழிப் பண்ணை செல்லதுரை முதல் லுக் போஸ்டர்!
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:35 IST)
மாமனிதன் திரைப்படத்துக்குப் பிறகு ஜி வி பிரகாஷ் நடிப்பில் சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்ரனர். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. படத்துக்காக உழவர் சந்தை செட் அமைத்து படமாக்கினார் சீனு ராமசாமி.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் யோகி பாபு வயதான கெட்டப்பில் இடம்பெற்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் ரேஸில் இணைந்த மூன்றாவது படம்… அருண் விஜய்யின் அச்சம் என்பது இல்லையே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!