யோகி பாபுவின் மனைவிக்கு முதல் பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்..!

வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (14:23 IST)
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சுபார்கவி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் ரகசிய திருமணம் நடைபெற்றது. திடீரென நடைபெற்ற திருமணத்தால் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஜாம் ஜாம்னு நடத்தலாம் என திட்டமிட்ட யோகி பாபு பத்திரிக்கை அடுத்து முதல்வர், அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் உட்பட பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது தேதியை தள்ளி வைத்துள்ளார் யோக பாபு. இந்நிலையில் சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பேசிய அவர், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி உங்களது மனைவியை பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டதாக கூறி இரு குடும்பத்தினரும் கோவாவில் சந்தித்தாக கூறினார்.

அப்போது திடீரென சிவகார்த்திகேயன் தனக்கு தங்கச் செயினை பரிசாக போட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது மனைவிக்கு முதல் பரிசாக தான் ஒரு புடவை வாங்கி கொடுத்ததாகவும், அதற்கு பதில் கிஃப்ட் மனைவி தனக்கு இரண்டு சட்டை வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அந்த சட்டை சொல்லாமலே படத்தில் வரும் லிவிங்ஸ்டன் அணியும் சட்டை போல இருந்தது என்று யோகி கிண்டல் அடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் குதிரையோடு புல் தின்னும் இந்த மான்.. சல்மான் கான்! – ட்விட்டரில் வைரலாகும் வீடியோ!