Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகிபாபு நடிப்பில் ராதாமோகன் இயக்கும் ‘சட்னி சாம்பார்’ டீசர் எப்படி?

vinoth
செவ்வாய், 2 ஜூலை 2024 (12:20 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்போது அவர் மொழி, பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். ஹாட்ஸ்டார் ஓடிடி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த சீரிஸுக்கு ‘சட்னி சாம்பார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. பிரபல ஓட்டல் நிறுவனம் ஒன்று கையேந்தி பவன் கடை வைத்திருக்கும் யோகி பாபுவிடம் அவரின் சட்னி ரெசிப்பி கேட்டு கூட்டு சேர முயற்சிப்பதும், அதற்கு யோகி பாபுவின் ரியாக்‌ஷன் என்ன என்பதுமே டீசரில் ஜாலி மூடில் காட்டப்பட்டுள்ளது. வழக்கமாக ராதா மோகன் படைப்புகளில் வசனங்கள் வாய்விட்டு சிரிக்கவைக்கும். ஆனால் இந்த டீசரில் அதுமட்டும் மிஸ்ஸிங்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments