Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோகி பாபுவின் ‘போட்’ படத்தோடு இணைந்த ஹோம்பாலே பிலிம்ஸ்!

யோகி பாபுவின் ‘போட்’ படத்தோடு இணைந்த ஹோம்பாலே பிலிம்ஸ்!

vinoth

, புதன், 31 ஜூலை 2024 (09:40 IST)
அண்மை காலமாக தமிழில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு எல்லா படங்களிலும் தலைகாட்டுகிறார். அதே போல கதாநாயகனும் சில படங்களில் நடித்துக் கலக்குகிறார். அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை இப்போது போட் மற்றும் சட்னி சாம்பார் ஆகியவற்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகனாக ஆனாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

அப்படி இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள போட் திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல கவனம் பெற்றுள்ளது. அதனால் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைக் கர்நாடகாவில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறதாம். கேஜிஎஃப், காந்தாரா போன்ற படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தை வெளியிடுவதால் கர்நாடகாவில் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர் ஜே பாலாஜி படத்துக்கு இசையமைக்கும் அனிருத்… டைட்டில் இதுதானாம்!