Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் காட்சிகளை எல்லாம் எடிட்டர் கட் செய்துவிட்டார்… மேடையில் புலம்பிய யோகி பாபு!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (14:22 IST)
ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கியுள்ள ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட நடிகர் யோகி பாபு பேசும்போது “அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் நான் நடித்திருந்தேன். ஆனால் அந்த காட்சிகளை எல்லாம் எடிட்டர் ரூபன் எடிட் செய்து தூக்கிவிட்டார். அதனால் என் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை” எனப் பேசியுள்ளார்.

தொடர்ந்து இயக்குனர் அட்லி குறித்து பேசிய அவர் “இயக்குனர் அட்லி தமிழில் எப்படி ஆளுமையோ, அது போல இந்தியிலும் அவர் ஒரு ஆளுமைதான். ஹாலிவுட்டுக்கும் சீக்கிரம் செல்லுங்கள். அங்கேயும் ஆளுமையாக வருவீர்கள். நீங்கள் ஹாலிவுட்டுக்கு சென்றால் நானும் உங்களுடனேயே வந்துவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம்!!

"அப்பு VI STD" திரை விமர்சனம்!

ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments