Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் எடுத்தது ஆபாச படம் தான்! அதனால் என்ன இப்ப: தெனாவட்டு இயக்குனர்

Advertiesment
, வியாழன், 22 ஜூன் 2017 (22:15 IST)
கோலிவுட் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து திரையுலகிலும் பாசமான படங்கள் இயக்கும் இயக்குனர்களும், ஆபாசமான படங்கள் இயக்கும் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் தான் இயக்கியவது ஒரு ஆபாச படம் தான் என்று தெனாவட்டாக ஒரு இயக்குனர் தெரிவித்துள்ளார்.



 


தற்போதைய சைபர் க்ரைம் உலகில் ரகசியம் என்பதே இல்லாமல் போய்விட்டதாகவும், இளம்பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் அவர்களுடைய அந்தரங்கங்கள் உலகம் முழுவதும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், இதனை தவிர்ப்பது எப்படி என்பதை ஆபாசங்கள் கலந்து தன்னுடைய படத்தில் இருப்பதாகவும் இயக்குனர் சஜோசுந்தர் என்பவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

'மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது. "பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை. இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை.

இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது.  அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான். அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் எக்ஸ் வீடியோஸ்.

"ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது. இது இளைஞர்களுக்கான படம் அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம். படத்தின் தலைப்பைக் கண்டு தவறாக கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஏனெனில் இது இந்த உலகில் ரகசியம் என்று எதுவுமில்லை என எச்சரிக்கும் படமே.

இவ்வாறு இயக்குனர் சஜோசுந்தர் கூறியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வனமகன்