Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'என்னை அறிந்தால் 2' திரைக்கதை தயாரிக்கும் பணியில் கவுதம் மேனன்

'என்னை அறிந்தால் 2' திரைக்கதை தயாரிக்கும் பணியில் கவுதம் மேனன்
, செவ்வாய், 16 ஜனவரி 2018 (01:31 IST)
அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' திரைப்படம் அஜித்தின் திரையுலக வாழ்வில் ஒரு மைல்கல்லான படம். சத்யதேவ் கேரக்டரை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களை இயக்கி வரும் இயக்குனர் கவுதம் மேனன், இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு 'என்னை அறிந்தால் 2' படத்தின் திரைக்கதையை அமைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ஒன்லைன் கதையை சமீபத்தில் அஜித் கேட்டு அசந்து போனதால், திரைக்கதையை தொடங்குமாறு அஜித் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிறுமியாக நடித்த பேபி அங்கிதா தற்போது பெரிய பெண்ணாக இருப்பதால் அவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றே நாட்களில் ரூ.45 கோடியை நெருங்கிய 'தானா சேர்ந்த கூட்டம்