Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்தானை முடிச்சு ரீமேக்கில் யாஷிகா ஆனந்த்… எந்த கேரக்டர் தெரியுமா?

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (11:50 IST)
முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் கவர்ச்சி புயலாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாக்யராஜின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு, ஏ வி எம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் விரும்பினார் என்று பாக்யராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின் அந்த படத்தை இப்போது ரீமேக் செய்து சசிக்குமார் நடிக்க உள்ளார். முதல் பாகத்தை எழுதி இயக்கிய பாக்யராஜே இந்த பாகத்துக்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். மேலும் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிக்க ஊர்வசி கேரக்டரில் யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்தது. இப்போது அதுபற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தன் நடிப்புத் திறனாலும், படங்களின் தேர்வாலும் கவனம் ஈர்த்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்தான் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றான அந்த டீச்சர் கதாபாத்திரத்தில் தற்போது நடிக்க யாஷிகா ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்