நடிகர் யாஷ் இன்னும் தனது அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. அதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கு மூலமாகவே வசூலித்தது.
இதையடுத்து பேன் இந்தியா ஸ்டாராகியுள்ளார் யாஷ். இந்நிலையில் யாஷுடன் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருனாள் பாண்ட்யா ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்துக்கு கேப்ஷனாக ஹர்திக் “KGF3” எனக் கொடுத்துள்ளார்.