Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

vinoth
வியாழன், 3 ஜூலை 2025 (14:16 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.  இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையடுத்து யாஷ் சம்மந்தமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

சமீபத்தில் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது யாஷ் படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த போஸ்டரோடு “ராமன், ராவணின் அழியாத கதையைக் காணத் தயாராகுங்கள். ராமாயணம். நமது உண்மை, நமது வரலாறு.  ஐமேக்ஸில் படமாக்கப்படட்து. இந்தியாவில் இருந்து சிறந்த உலகை அமைப்பதற்கு” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் 64: திரைவாழ்வைத் தொடங்கிய நாளில் அடுத்த பட அப்டேட்.!

நான்கே வாரத்தில் நெட்ளிக்ஸில் சத்தமில்லாமல் ரிலீஸானது ‘தக் லைஃப்’…!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிசி’ டீசர் இணையத்தில் கசிந்தது.. படக்குழுவினர் அதிர்ச்சி!

சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்பு சீவி படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ!

தெலுங்கு படத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா ஸ்ருதிஹாசன்?

அடுத்த கட்டுரையில்
Show comments