Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஷ்ஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் இணைந்த ஜான் விக் பட ஸ்டண்ட் இயக்குனர்!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (11:08 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு  சில மாதங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

தற்போது விறுவிறுப்பாக இந்தபடத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 10 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை உருவாக்க ஹாலிவுட்டில் ‘ஜான் விக்’ உள்ளிட்ட படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய ஜே ஜே பெர்ரி இணைந்துள்ளார்.

படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் இயக்குனரை இறக்குமதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments