Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் கசிந்தது!

vinoth
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (07:50 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போதுதான் யாஷ் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. நயன்தாரா சில பாலிவுட் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாஷ் உள்ளிட்டவர்கள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்தது. படப்பிடிப்பை உரிய பாதுகாப்புகளோடு நடந்த போதும் இந்த புகைப்படம் வெளியானது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும் யார் இந்த புகைப்படத்தை வெளியிட்டார்கள் என்று விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகவில்லை… நடந்தது இதுதான் –மனம் திறந்த இயக்குனர் பாலா!

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

நான்கு நாட்களில் 25 கோடி ரூபாய் கூட வசூல் பண்ணாத அட்லியின் தயாரிப்பான ‘பேபி ஜான்’…!

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

அடுத்த கட்டுரையில்
Show comments