Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண்விஜய்யின் யானை படப்பிடிப்பு நிறைவு!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (16:29 IST)
அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் யானை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் யானை. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடித்து வரும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதும், இந்த படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. அதையொட்டி படக்குழுவினர் தங்களுக்குள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments