நெல்லை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மர்மமான முறையில் 14 வயது ஆண் யானை இறந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூதப்பாண்டி வனத்தில், வனத்துறையினர் ரோந்து சென்றபோது யானை ஒன்று இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். இதையடுத்து கால்நடைத் துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில் யானைக்கு 14 வயது இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. யானையின் மரணத்துக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.