‘’நல்லா இருக்கும் இல்லையா’’ விக்ரமுடன் லியோவை இணைக்கும் மீம் வைரல்...பிரபல நடிகர் டுவீட்

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (19:30 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் லியோ.

தற்போது, விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில், லியோ படத்தில் 2 ஆயிரம் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய பிரமாண்ட பாடல் காட்சி சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தியுள்ள இப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ லலித்குமார் தயாரித்து வரும் நிலையில்,   இப்படம் வெளியீட்டிற்கு முன்பே  இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ. 350 கோடிக்கு வசூலாகியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, லியோ படத்தை அமெரிக்காவில் மட்டும் 1500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  விக்ரம் படத்தையும் லியோ படத்தையும் இணைக்கும் வகையில் ஒரு மீம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதைத் தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரீஸ் உத்தமன் ‘’நல்லா இருக்கும் இல்லையா’’ என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments