Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊடக ஊழல் குறித்த 'கவண்' படத்தை பாராட்டிய ஊடகவியலார்கள்

Advertiesment
, புதன், 12 ஏப்ரல் 2017 (01:15 IST)
பொதுவாக ஒரு துறையை சேர்ந்தவர்களை விமர்சனம் செய்து திரைப்படம் எடுத்தால் அந்த படத்திற்கு அந்த துறையினர் கண்டனம் தெரிவிப்பதுதான் வழக்கம். ஆனால் சமீபத்தில் வெளியான 'கவண்' திரைப்படம் ஒருசில ஊடகங்கள் டிஆர்பி ரேட்டிங்கிற்காக செய்யும் தில்லுமுல்லுகலை தோலுரித்து காட்டியது. இந்த படத்திற்கு தற்போது ஊடகவியலார்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


 


ஆம், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், 'கவண்' படத்திற்கு பாராட்டு தெரிவித்து ஒரு விழாவை நேற்று நடத்தியது. இந்த விழாவில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், கே.வி.,ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இறுதியில் இயக்குனர் கே.வி.ஆனந்த் பத்திரிகை சங்கத்தினர்களுக்கு நன்றி கூறினார்

இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் எழுத்தாளர்கள் தங்கள் டுவிட்டரில் கூறியபோது, 'திரைப்படம் வெளியாகி பத்தே நாளில் கூப்பிட்டு, நெகிழ்ச்சியுடன் பாராட்டி மரியாதை செய்த ஊடக நண்பர்கள் நெஞ்சில் நிறைந்து நிற்கிறார்கள்.. நன்றி' என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் யாருடைய மகன்? நெருங்கியது தீர்ப்பு தேதி