Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை! – நடிகை குஷ்பூ உறுதி!

Advertiesment
Mansoor Alikhan
, ஞாயிறு, 19 நவம்பர் 2023 (15:39 IST)
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் லியோ படத்தில் த்ரிஷாவுடன் தனக்கு காட்சிகள் வைக்கப்படாதது குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து த்ரிஷா வெளிப்படையாக மன்சூர் அலிகானை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் திரைத்துறையினர் மன்சூர் அலிகானை கண்டித்து பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும், இந்த விவகாரத்தில் தான் முழுமையாக நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சினிமா உலகில் இதுபோல பெண்களை இழிவுப்படுத்தும் பேச்சுகளை ஆதரிக்ககூடாது என்றும் மன்சூர் அலிகானை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்களாவது.. உங்க பிக்பாஸாவது.. ஆள விடுங்க சாமி! – தெறித்து கோவா பக்கம் ஓடிய ப்ரதீப் ஆண்டனி!