Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தை ஒரு வீடியோ எடுத்து தற்கொலை வரை சென்ற பெண்! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

Advertiesment
அஜித்தை ஒரு வீடியோ எடுத்து தற்கொலை வரை சென்ற பெண்! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்!
, புதன், 21 ஏப்ரல் 2021 (18:08 IST)
நடிகர் அஜித்தை மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் வீடியோ எடுத்ததால் அவர் வேலை இழந்து தற்கொலை வரை சென்றுள்ளார்.

நடிகர் அஜித் பொது இடங்களுக்கு மிகவும் அரிதாக செல்லும்போதெல்லாம் அவரை யாராவது வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்வது வாடிக்கையாகிவிடுகிறது. அப்படி கடந்த ஆண்டு மே மாதம் அஜித் ஒரு மருத்துவமனைக்கு சென்ற போது அவரை அங்கு பணிபுரியும் பர்ஜானா என்ற பெண் வீடியோ எடுத்துள்ளார்.

இதையறிந்த மருத்துவமனை நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்ய பின்னர் அஜித் தரப்பு கேட்டுக்கொண்டதால் வேலைக்கு மீண்டும் சேர்த்துக் கொண்டுள்ளது. ஆனால் பர்ஜானாவை பழைய மாதிரி நடத்தாமல் எந்த வேலையும் கொடுக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை மறுபடியும் வேறு சில காரணங்கள் சொல்லி வேலை நீக்கம் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அஜித்தின் மேலாளரை பர்ஜானா தொடர்புகொண்டு உதவிக் கேட்டுள்ளார். ஆனால் அஜித் தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் பர்ஜானா சில தினங்களுக்கு முன்னர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகைக்குக் கொரோனா தொற்று.. ரசிகர்கள் அதிர்ச்சி