Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான்கான் வீட்டில் நுழைய முயன்ற மர்ம பெண் கைது.. பாதுகாப்பை மீறி எப்படி சென்றார்?

Mahendran
வியாழன், 22 மே 2025 (15:58 IST)
மும்பை போலீசார், இன்று காலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்ட் வசிப்பிடத்திற்கு அனுமதியின்றி புக முயன்ற ஒரு பெண்ணை கைது செய்தனர். 
 
போலீசார் இதுகுறித்து கூறியதாவது, அந்த பெண் அந்த பாதுகாப்பு கட்டமைப்பை உடைத்து நடிகரின் வீட்டிற்கு செல்ல முயன்றார், ஆனால் அவர் அதற்கு முன் சிக்கினார். தற்போது அவர் விசாரணையில் உள்ளார், மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?  அவர் உள்ளூர் தங்கி இருக்கிறாரா அல்லது வேறு நகரிலிருந்து வந்தவரா என்பது இன்னும் தெரியவில்லை.
 
முன்னதாக மே 20-ஆம் தேதி கேலக்ஸி அபார்ட்மெண்ட்ஸ் நுழைய முயன்ற ஒருவரை  பாதுகாப்பு பணியாளர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆரம்ப விசாரணையில், அவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
 
 கடந்த ஆண்டு சல்மான் கான் வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டுக்குப் பிறகு  அதிக பாதுகாப்பில் உள்ளார். அப்போது அவருக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி, இரண்டு பேர் சல்மான் கானின் வீட்டிற்கு நான்கு ரவுண்ட் துப்பாக்கிச்சூடு செய்து இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளனர். கொங்கஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவே இந்த சூட்டுக்கு பொறுப்பேற்றது என்று ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 கோடி சம்பளம்.. 8 மணி நேரம் தான் வேலை.. லாபத்தில் பங்கு.. தீபிகாவை நீக்கிய இயக்குனர்..!

ஜெயிலர் 2 அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

சம்மந்தப்பட்ட நடிகை என்னிடம் மன்னிப்புக் கேட்டார் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்ரன்!

நாயகன் படத்துக்கும் ‘தக் லைஃப்’ படத்துக்கும் ஒருவிஷயம்தான் சம்மந்தம்- மணிரத்னம்

சம்பளமே வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன்.. ‘பராசக்தி’ பணம் அவ்வளவுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments