கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் நடிகர் சல்மான் கானின் திரைவாழ்க்கை பிரகாசமாக இல்லை. அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸானது.
ஆனால் ரிலீஸாவதற்கு முன்பே இந்த படத்தின் HD பிரிண்ட் முதல் நாளே இணையத்தில் ரிலீஸானது. இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் சல்மான் கான் தன்னுடைய அடுத்த படத்தில் தெலுங்கு இயக்குனரான ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.