Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல ஹாலிவுட் நடிகர் மேல் அவரின் உதவியாளர் பாலியல் புகார்!

பிரபல ஹாலிவுட் நடிகர் மேல் அவரின் உதவியாளர் பாலியல் புகார்!
, வெள்ளி, 22 டிசம்பர் 2023 (11:12 IST)
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் 10 பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 10 பாகங்களிலும் கதாநாயகனாக நடித்து உலகளவில் பிரபலம் அடைந்தவர் ஹாலிவுட் நடிகர் வின் டீசல். பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது.

56 வயதாகும் வின் டீசல் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் அவரின் உதவியாளரான ஆஸ்டா ஜான்சன் என்ற பெண்மணி தன்னிடம் பாலியல் ரீதியாக வின் டீசல் தவறாக நடந்து கொண்டதாக மீ டு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

வின் டீசலின் முன்னாள் உதவியாளரான ஆஸ்டா ஜான்சன் இது சம்மந்தமாக வழக்கு ஒன்றையும் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். பாஸ்ட் ஃபைவ் ஷூட்டிங்கின் போது இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் “அப்போது அதிகாலையில் அவரைக் கிளப்பி ஷூட்டிங் அழைத்து செல்லும் பணியில் நான் இருந்த போது என்னை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்து மார்பைக் கசக்கினார். என்னை முத்தமிட்ட அவர் என் உள்ளாடையை இழுத்தார். நான் அவர் ஆசைக்கு ஒத்துழைக்காததால் அவரின் சகோதரி என்னை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலவையான விமர்சனங்களால் வசூலில் அடிவாங்கிய டன்கி… முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?