Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருமன் படத்தில் பிரகாஷ் ராஜ் நீக்கமா? படக்குழு ஆலோசனை!

விருமன் படத்தில் பிரகாஷ் ராஜ் நீக்கமா? படக்குழு ஆலோசனை!
, திங்கள், 11 அக்டோபர் 2021 (09:59 IST)
விருமன் படத்துக்காக கால்ஷீட் தந்த பிரகாஷ்ராஜ் ஆனால் சொன்னபடி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் சம்மந்தமானக் காட்சிகளை படமாக்க படக்குழு தேனியில் முகாமிட்டு இருந்த நிலையில் அவர் கலந்துகொள்ளாததால் படக்குழுவினர் பாதியிலேயே திரும்பியுள்ளனர். இதற்குக் காரணம் அவர் தெலுங்கு நடிகர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதுதான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த மாதம் 20 ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். அதில் மட்டும் பிரகாஷ் ராஜ் கலந்துகொள்ளவில்லை என்றால் அவருக்குப் பதில்  வேறு ஒருவரை நடிக்க வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் நாளைவிட எகிறிய ’டாக்டர் 2வது நாள் வசூல்: ரசிகர்கள் மகிழ்ச்சி