Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''வாரிசு'' பட ஃபர்ஸ்ட் சிங்கில் எப்போது ரிலீஸ்?

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (16:05 IST)
விஜய்யின் வாரிசு படத்தின் முதல் சிங்கில் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பீஸ்ட் படத்திற்குப் பின் நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர்  நடித்துள்ளனர். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதால், இதன் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  
.
சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ உரிமையை பாலிவுட்டின் பிரபல ஆடியோ வெளியீட்டு நிறுவனமான டி சீரிஸ் கைப்பற்றிய நிலையில், இப்படம் சுமார் ரூ.280 கோடி வரையில் பிஸினஸ் ஆகியுள்ளதாகக் ஒரு தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், தீபாவளி அன்றே இப்படத்தின் முதல் சிங்கில் பற்றிய அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த நிலையில் ஆறுதலாக ஒரு புதிய போஸ்டர் மட்டும் ரிலீஸானது.

ALSO READ: ''வாரிசு ''படத்தில் என் டப்பிங் பணிகள் முடிந்தது- பிரபல நடிகர் டூவிட்
 

எனவே,  இப்படத்தின் முதல் சிங்கில் பற்றிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #Vaasiru1stsingle என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
.

இப்பாடல் வரும் 4 அல்லது 5 ஆம் தேதியில் ரிலீஸாகலாம் எனக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமெரிக்காவில் செம்ம ஹிட்டடித்த ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

இன்றைய ஓடிடி ரிலீஸ்கள்…எந்தந்த தளங்கள்… என்னென்ன படங்கள்?

இன்னும் 50 நாட்கள்… ரிலீஸ் குறித்த அப்டேட்டுடன் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Waiting இயக்குனரே… கருப்பு படத்தின் எதிர்பார்ப்பை ஏற்றிய சூர்யாவின் பதிவு!

அடுத்த கார் ரேஸ் பந்தயத்துக்குத் தயாரான அஜித் குமார்… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments