Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

VTV தெலுங்கு வெர்ஷன் ரி ரிலீஸ்… ஒரே மேடையில் சமந்தா & நாக சைதன்யா?

Advertiesment
சமந்தா

vinoth

, செவ்வாய், 17 ஜூன் 2025 (09:45 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இதற்கிடையில் அவரது தந்தையின் மரணமும் அவரை வெகுவாகப் பாதித்தது.

சமந்தாவை ஒரு முன்னணி நடிகையாக மாற்றிய படம் என்றால் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்குப் பதிப்பை சொல்லலாம். அதில் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த கதாபாத்திரங்களில் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்தனர். இந்த படத்தின் போதுதான் இருவரும் காதலில் விழுந்தனர்.

இந்நிலையில் ’யே மாயா சேசவே’ திரைப்படம் ஜூலை 18 ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்துப் படத்தை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு செல்ல படக்குழு ப்ரமோஷன் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் மீண்டும் ஒன்றாக  தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக் லைஃப் படுதோல்வி… தியேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு கோரிக்கையா?... கமலுக்கு அடுத்த சிக்கல்!