Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லூசிபர் படத்தில் மாதவன்… தூண்டில் போடும் இயக்குனர் மோகன் ராஜா!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (15:29 IST)
லூசிபர் படத்தில் விவேக் ஓபராய் கொடூரமான வில்லனாக நடித்திருந்தார்.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் பிருத்விராஜ் நடித்திருந்த வேடத்தில் நடிக்க சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம். அதே போல விவேக் ஓப்ராய் நடித்திருந்த பின்னி கதாபாத்திரத்தில் நடிக்க மாதவனிடம் இயக்குனர் மோகன் ராஜா பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லிங்குசாமி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க மாதவன் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments